Ummai nambi vandhaen - உம்மை நம்பி வந்தேன்




Credits :

Song : Ummai nambi vandhaen
Lyrics : John Jebaraj
Album : Levi - 3

Lyrics:

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல - 2
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் - 2

ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன் - 2

காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் - 2
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் - 2

வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் - 2
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர் - 2
---------

Video Link :

To watch  this song on Youtube. Click here